சென்னை மாவட்டம் பிளஸ் 1 தேர்வில் 96.86% தேர்ச்சி

சென்னை, மே 9: சென்னை மாவட்டம் பிளஸ் 1 தேர்வில் 96.86 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. 173 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. சென்னை மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வு எழுதிய மொத்த மாணவர்கள் 46 ஆயிரத்து 551 பேர். இவர்களில் 21349 பேர் மாணவர்கள். 25202 பேர் மாணவியர். மொத்த மாணவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 45 ஆயிரத்து 89 பேர். அவர்களில் 20 ஆயிரத்து 403 பேர் மாணவர்கள். 24 ஆயிரத்து 686 பேர் மாணவியர். மொத்த தேர்ச்சி வீதம் 96.86 சதவீதம். மாணவர்களின் தேர்ச்சி வீதம் 95.57 சதவீதம். மாணவியரின் தேர்ச்சி வீதம் 97.95 சதவீதம். சென்னை மாவட்டத்தில் கடந்த ஆண்டு மொத்த தேர்ச்சி வீதம் 94.4 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டு தேர்ச்சி வீதம் 2.46 சதவீதம் உயர்ந்துள்ளது.

சென்னை மாவட்டத்தில் மொத்தம் 410 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் அரசு பள்ளிகள் 22. அரசு பள்ளிகளில் பிளஸ் 1 படித்து தேர்வு எழுதியோர் 3926. இவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் 3613. மொத்த தேர்ச்சி சதவீதம் 92.03 சதவீதம். சென்னை மாவட்டத்தில் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் மூலம் 12 ஆயிரத்து 934 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். அவர்களில் 12 ஆயிரத்து 427 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்த தேர்ச்சி சதவீதம் 96.08 ஆகும்.

Tags : Chennai District ,
× RELATED போலீஸ் உடற்தகுதி தேர்வு 18ம் தேதி தொடக்கம்