×

ஆழ்வார்குறிச்சி சாஸ்தா கோயிலில் கொடை விழா கால்நாட்டு நிகழ்ச்சி

கடையம், மே 9: ஆழ்வார்குறிச்சி காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயிலில்  கொடை விழாவை முன்னிட்டு கால்நாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஆழ்வார்குறிச்சி ராமநதி ஆற்றின் கரையின் தென்புறம் பிரசித்திப் பெற்ற 141 கிராம சேனைத் தலைவர் சமுதாய வரிதாரர்களுக்கு பாத்தியப்பட்ட காக்கும் பெருமாள் சாஸ்தா, சுடலை மாடசாமி கோயிலில் சித்திரை மாதம் கொடை விழா நடைபெறும். இந்தாண்டு கொடை விழாவை முன்னிட்டு நேற்று கால்நாட்டு வைபவம் நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடைபெற்றது. மதியம் அன்னதானம் நடந்தது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர். வருகிற 13ம் தேதி மாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கும்பம் ஏற்றி குடியழைப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

கொடை விழாவான 14ம் தேதி அதிகாலை 5 மணி முதல் 6 மணிக்குள் சிவனணைந்த பெருமாள் பூஜை, காலை 8 மணி முதல் 10 மணிக்குள் பால்குடம், அபிஷேகம், மதியம் 12 மணிக்கு பட்டாணி பாறையில் பழம் எறிதல் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து  உச்சிகால கொடை பூஜை நடைபெறும். மாலை மகா அபிஷேகம், அலங்காரம்,  இரவு சாமக்கொடை, ஊட்டுகளம், அர்த்தசாம பூஜை நடக்கிறது. 15ம் தேதி காலை 10 மணிக்கு சின்னநம்பி பூஜை வைபவங்கள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் வளர்ச்சி நல கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

Tags : Kodai Festival ,Shiva ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...