பாளை தூய யோவான் பள்ளி தலைமை ஆசிரியர் இல்ல திருமண விழா

நெல்லை, மே 9: பாளை தூய யோவான் பள்ளித் தலைமை ஆசிரியர் சாத்ராக் ஞானதாசன் இல்ல திருமண விழா விமரிசையாக நடந்தது. இதில் திரளானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். கோவைகுளம் தொழிலதிபர் அதிசயமணி- ஜெபமணி பேத்தியும், பாளை தூய யோவான் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் சாத்ராக் ஞானதாசன்-அரோமா ஜோஸ் ஞானகிருபா தம்பதியரின் மகளுமான டாக்டர் ஷேரன் கிறிஸ்டோ ஜூன்பெட்.  டாக்டர் ஆண்ட்ரூ ஜெபக்குமார்- சுஜாதாஆண்ட்ரூ தம்பதியரின் மகன் டாக்டர் பென்னட் பிலிப் ஆகியோரின் திருமணம் மகாராஜநகர் தூய திரித்துவ ஆலயத்தில் நடந்தது. தொடர்ந்து கேடிசி நகர் மாதா மாளிகையில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் நெல்லை திருமண்டல ‘லே’ செயலாளர் வேதநாயகம், திருமண்டல தலைவர் (பொறுப்பு) பில்லி, குருத்துவ செயலாலர் பீட்டர் தேவதாஸ், டிடிடிஏ கமிட்டி ஆப் மேனேஜ்மென்ட் இயக்குநர் விஜிலா சத்யானந்த் எம்பி, திருமண்டல பொருளாளர் தேவதாஸ், ஞானராஜ், கல்வி நிலவரக்குழு செயலாளர் செல்வராஜ், உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஆசிரிய பயிற்சி நிறுவனங்களின் மேலாளர் ஆர்தர்ராஜா, தொடக்க, நடுநிலைப் பள்ளிகளின் மேலாளர் ஆபிரகாம், திருமண்டல சட்ட ஆலோசகர் ஆண்ட்ரூஸ் சாம்ராஜ், டயோசீசன் புக் டெப்போ கண்காணிப்பாளர் ஜீவக்குமார், எஸ்டிசி கல்லூரி தாளாளர் சாம்சன் பால்ராஜ், தூய யோவான் கல்லூரி தாளாளர் ஜார்ஜ் கோசல் மற்றும் டிடிடிஏ நிர்வாகக்குழு உறுப்பினர்கள், டிடிடிஏ கமிட்டி ஆப் மேனேஜ்மென்ட் உறுப்பினர்கள், சபை மன்ற தலைவர்கள், சபை குருவானவர்கள், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள், பாஸ்ட்ரேட் கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள், பள்ளிகள் கல்லூரிகளின் தாளாளர்கள், தலைமைஆசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள், கல்வியாளர்கள், நண்பர்கள், உறவினர்கள் என திரளானோர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். ஏற்பாடுகளை இரு வீட்டாரும் செய்திருந்தனர்.

Tags : headmaster ,St. John's School ,
× RELATED தலைமை ஆசிரியருக்கான கலந்தாய்வு கூட்டம்