×

ஜூன் 14ல் மஹா கும்பாபிஷேகம் திருமலைக்குமாரசாமி கோயிலில் யாகசாலை ஸ்தம்ப பிரதிஷ்டை

தென்காசி, மே 9:  தென்மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பண்பொழி திருமலைக்குமாரசாமி கோயில் 544 படிக்கட்டுகளை கொண்டது. இந்த படிகட்டுகளின் வழியாக ஏறிச்சென்றுதான் மலை மீது அமர்ந்துள்ள முருகனை பக்தர்கள் தரிசனம் செய்து வந்தனர். கடந்த 2011ம் ஆண்டு இந்த மலைக்கோயிலுக்கு செல்லுவதற்கான மலைப்பாதையை தமிழக அரசின் அனுமதியோடு அறங்காவலர் குழு முன்னாள் தலைவர் அருணாசலம் தனது சொந்த  செலவில் அமைத்து கொடுத்தார். மேலும் அவரும், அவரது துணைவியார் பரமேஸ்வரியும் புதிதாக உருவாக்கிய தங்கத்தேர் திருவிழா நாட்களில் வீதியுலா வருகிறது. மேலும் இவர்களது சொந்தசெலவில் 5 நிலை கொண்ட 48.75 அடி உயரத்தில் ராஜகோபுரம் அமைப்பதற்காக துவங்கிய கட்டுமானப் பணி நிறைவடைந்தது. இதையடுத்து வர்ணம் பூசும் பணிகளும் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன.

இதையடுத்து ஜூன் 14ம் தேதி மஹா கும்பாபிஷேகம் நடக்கிறது. இதற்கான யாகசாலை பூஜைகள் ஜூன் 9ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கும் நிலையில் யாகசாலை பூஜைகளுக்கான ஸ்தம்ப பிரதிஷ்டை விழா நேற்று விமரிசையாக நடந்தது. முன்னதாக  காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் பிள்ளையார்பட்டி பிச்சை குருக்கள், ரமேஷ்பட்டர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் பங்கேற்று  பூஜைகளை நடத்தினர். இதில் முன்னாள் அறங்காவலர் அருணாசலம், கோயில் உதவி ஆணையர் அருணாசலம், கோயில் பணியாளர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

Tags : Maha Kumbabishekam ,Tirumalakulamarasamy Temple ,
× RELATED 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த...