×

குழித்துறை இடைத்தெரு விஸ்வகர்மா சமுதாய முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா

நாகர்கோவில், மே 9: குழித்துறை இடைத்தெரு விஸ்வகர்மா சமுதாய அருள்மிகு முத்துமாரியம்மன் கோயில் மகா கும்பாபிஷேக விழா  நேற்று முன்தினம் (7ம் தேதி) காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன்  தொடங்கியது. 6.30 மணிக்கு நவக்கிரக ஹோமமும், 7.30 மணிக்கு பூர்ண சுத்திகரிப்பு ஹோமமும் நடைபெற்றது.  மாலை வாஸ்துசாந்தி பூஜை, இரவு வாஸ்துபலி, பாலஸ்தாபித பூஜை, பரிகார பூஜை நடந்தது. 2வது நாளான ேநற்று காலை கணபதிஹோமம், சக்தி ஹோமம், நவக்கிரக ஹோமம்,  லெட்சுமி ஹோமம்,  இரவு வாஸ்து சாந்தி பூஜை நடந்தது. 8 மணிக்கு மகா ருத்ர ஹோமம் மற்றும்  யாகசாலை பூஜைகளை தொடர்ந்து  8.30 மணிக்கு தீபாராதனை நடைபெற்றது.

3வது நாளான இன்று காலை 6.30 மணிக்கு கணபதிஹோமம், 7.30 மணிக்கு தீர்த்தம் எடுத்தல், 10.30 மணி வரை யாகசாலை பூஜை நடைபெறுகிறது. 10.30 மணி முதல் 11.30 மணி வரை விமான கும்பாபிஷேகம் மற்றும் முத்துவைரவர், முத்துமாரியம்மன் மகா கும்பாபிஷேகமும் அலங்கார தீபாராதனையும் நடைபெறும். 1.30 மணி முதல் பொங்காலை, மதியம் 12 மணிக்கு உச்சகால பூஜை மதியம் ஒரு மணிக்கு அன்னதானம் நடைபெறும்.  மாலை 6.30க்கு திருவிளக்குபூஜை,  7 மணிக்கு  குங்கும அர்ச்சனை,  7.30க்கு புஷ்பாபிஷேகம்,  9.30க்கு  அம்மாள்  மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு  சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விஸ்வகர்மா சமுதாய நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Tags : Kumbhabhishekam Festival ,
× RELATED பள்ளிபாளையம் ஓம்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா