நடவடிக்கை குறைந்தது

நாகர்கோவில், அசம்பு ரோட்டில் சாலையோரங்களில் இரு பக்கமும் இரு சக்கர வாகனங்கள் அதிக அளவில் பார்க்கிங் செய்யப்படுவதுடன் கார்கள் போன்றவையும் சாலையோரங்களில் நிறுத்தி விடப்படுவதால் நெரிசல் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசல் காலங்களில் ரோந்து போலீசார் சாலையோரங்களில் போக்குவரத்து விதிகளை மீறி நிறுத்தப்படும் கார்கள், இருசக்கர வாகனங்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது குறைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் விரும்பிய இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனர். கோர்ட் ரோடு, எஸ்எல்பி பள்ளி சாலையில் பார்க்கிங் பகுதியில் வாகனங்களை நிறுத்துவதும், திரும்ப எடுப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் இந்த சாலையும் நெரிசலில் சிக்கி திணறுகிறது.

× RELATED இலவச சைக்கிளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்