×

கே.எம்.சி.எச் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை, மே 8: கோவை பீளமேட்டில் உள்ள கே.எம்.சி.எச் மருத்துவமனை மற்றும் பெடரேசன் ஆப் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலமாக பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற, பெறாத பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை மாணவிகளுக்கு ஒரு ஆண்டு இலவச நர்சிங் தொடர்பான பாட பிரிவுகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கே.எம்.சி.எச் துணை தலைவர் தவமணி பழனிச்சாமி, முதன்மை செயல் அதிகாரி சிவகுமரன், புளோ கோவை தலைவர் பூனம் பானா ஆகியோர் கையெழுத்து போட்டனர். நர்சிங் உதவியாளர்கள், ஆம்புலன்ஸ் டெக்னீசியன், ஐசியூ டெக்னீசியன், மருந்தக உதவியாளர் ஆகிய பிரிவுகளில் பயிற்சி தரப்படுகிறது. பயிற்சி பெற்றவர்களுக்கு கே.எம்.சி.எச்சியில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது.

Tags :
× RELATED அரசு பள்ளி ஆய்வக உதவியாளர்களுக்கான...