×

ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் இலவச செயல்முறை பயிற்சி 14 பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்

ராஜபாளையம், மே 8: ராம்கோ தொழில்நுட்பக் கல்லூரியில் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை சார்பில் இலவச செயல்முறைப் பயிற்சி கடந்த ஏப்.22 முதல் 26 வரை ‘ஹேண்ட்ஸ் ஆன் டிரெயினிங் ஆன் ஆர்டினோ புரோகிராமிங் அண்டு ஹார்வேர்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இந்த பயிற்சியை மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறை இணைப்பேராசிரியர் டாக்டர் கே.கார்த்திகேயன் தொடங்கி வைத்தார். 74 மாணவர்கள் பங்கேற்ற இந்த பயிற்சியில் 14  பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் ஆர்வமுடன் பங்கேற்றனர். ஆர்டினோ போர்டு பற்றிய அடிப்படை தொழில் நுட்பத்தில் இருந்து எவ்வாறு புதுமையான மின் பிராஜெக்ட் செய்ய முடியும் என்பதை மாணவர்கள் 5 நாட்களில் கற்றனர். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையைச் சேர்ந்த அனுபவமிக்க உதவி பேராசிரியர்கள் அருண்குமார், ஜெயந்தி மற்றும் சர்மிளாகுமாரி ஆகியோர், பயனுள்ள பல தொழில்நுட்பங்களை மாணவ, மாணவியர்களுக்கு எளிமையாக கற்றுக் கொடுத்தனர்.

பயிற்சியின் இறுதியாக மாணவர்களின் செயல்திறனை சோதிக்கும் வகையில், செயல்திறன் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற குழுவிற்கு பரிசு வழங்கப்பட்டது. இறுதியில் 26ம் தேதி நடைபெற்ற விழாவில் உதவிப்பேராசிரியர் அருண்குமார் தொகுத்து வழங்கி, கல்லூரி முதல்வர் முனைவர் ஜவஹர் மாணவர்களை பராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.  உதவி பேராசிரியர் ஜெயந்தி நன்றியுரை வழங்கினார்.


Tags : School students ,Ramco Technology College ,
× RELATED முகலிவாக்கம் வேலம்மாள் பள்ளி மாணவர்கள் சாதனை