×

நோய்கள் தாக்குகின்றன கால்நடைகளை மிரட்டும் காலநிலை மாற்றம் கால்நடைத்துறை அதிகாரிகள் மவுனம்

உத்தமபாளையம், மே 8: உத்தமபாளையம், தேவாரம் பகுதிகளில் கொளுத்தும் வெப்பத்தாலும், மாறிமாறி வரக்கூடிய சீதோஷ்ண நிலையினாலும் கால்நடைகளை நோய்கள் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தேனிமாவட்டத்தில் உத்தமபாளையம், அனுமந்தன்பட்டி, கோம்பை, கோகிலாபுரம், ராயப்பன்பட்டி, க.புதுப்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அதிகமானஅளவில் கால்நடை வளர்ப்புதொழில் நடக்கிறது. கறவைமாடுகளை பால் உற்பத்திக்காக வளர்க்ககூடிய தொழிலாளர்கள் அதிகளவில் உற்பத்திசெய்யப்படும் பாலை மார்க்கெட்களுக்கு கொண்டு வருகின்றனர். இதேபோல் கோழிவளர்ப்பு, ஆடு வளர்ப்புதொழிலும் நடக்கிறது. இதனை ஜீவாதாரமாக நம்பி பலஆயிரம் குடும்பங்கள் உள்ளன. கால்நடைகளுக்கு நோய்கள் புதிதாக வராமல் தடுக்கவும், கால்நடைகளுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கவும், கால்நடைத்துறை இணைஇயக்குநர், துணைஇயக்குநர் அலுவலகங்கள் செயல்படுகின்றன. கிராமங்கள், நகரங்களில் கால்நடை மருந்தகங்கள் செயல்படுகின்றன.

இப்போதுள்ள சூழலில் அதிகமானஅளவில் வெப்பம் கொளுத்துகிறது. இதனை தடுக்கவேண்டிய கால்நடைத்துறை டாக்டர்களோ எந்தவிதமான ஆலோசனைகளையும் வழங்குவதில்லை. பல ஊர்களில் செயல்படும் கால்நடை மருந்தகங்களுக்கு டாக்டர்களே பணிக்கு செல்வதில்லை என்ற புகாரும் எழுந்துள்ளது. இதனால் கால்நடைகளை தாக்ககூடிய கழிச்சல் உள்ளிட்ட நோய்களுக்கு தனியார்களில் சென்று மருந்துகளை வாங்ககூடிய நிலையில் கால்நடை வளர்ப்பவர்கள் உள்ளனர். எனவே மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளையும், ஆலோசனைகளையும் வழங்கவேண்டும்.கால்நடை வளர்ப்பவர்கள் கூறுகையில், கால்நடைகளை பாதுகாக்க விலை உயர்ந்த மருந்துகள் மருத்துவமனைகளில் இருந்தாலும், அதனை டாக்டர்கள் தருவதில்லை. மாறி மாறி வரக்கூடிய சீதோஷ்ண நிலை அதிக வெப்பம் கொளுத்தும் காலங்களில் வரக்கூடிய நோய்களை தடுக்க தேவையான ஆலோசனைகளையும் தருவதில்லை என்றனர்.

Tags : Disease attacks climate change ,
× RELATED கொரோனா அச்சுறுத்தலால் ஒரகடத்தில் நோக்கியா நிறுவனம் மூடல்