×

சமூக வலைதளங்களில் வெளியான படத்தால் பரபரப்பு சுருளி அருவியில் கொள்ளை நடந்தும் போலீசார் கண்காணிப்பு குறைவு அதிருப்தியில் சுற்றுலாபயணிகள்

கம்பம், மே 8: கம்பம் அருகே சுருளிஅருவியில் கொள்ளை நடந்தும் போலீசார் கண்காணிப்பு குறைவாகவே உள்ளது.தேனிமாவட்டத்தின் பிரசித்திபெற்ற புண்ணியதலமாக உள்ள சுருளிஅருவிக்கு அதிகமான அளவில் பக்தர்களும், வெளியூர் சுற்றுலாபயணிகளும் வருவது வழக்கம். தற்போது கோடை விடுமுறை தினம் என்பதால் மதுரை, திண்டுக்கல், இடுக்கி மாவட்டங்களில் இருந்து அதிகமான அளவில் சுற்றுலாபயணிகள் வருகின்றனர். தென்மேற்கு பருவமழை, கோடை மழை முறையாக பெய்யாத நிலையில் சுருளி அருவிக்கு வரக்கூடிய தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிட்டது. இதனால் சுற்றுலா வருபவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இருந்தாலும் சுற்றுலாபயணிகள் மிக ஆர்வமாக சுருளி அருவிக்கு வருகின்றனர். அதேநேரத்தில் சுற்றுலாபயணிகளிடம் ரூ.5 கட்டணத்தை வசூல் செய்வதில் வனத்துறையினர் மிக தீவிரமாக இறங்கி உள்ளனர்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுருளி அருவியில் கொள்ளை நடந்தது. இதில் பூசாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார். மற்றொருவருக்கு அரிவாள்வெட்டு விழுந்தது. ஆனாலும் போலீசார் கண்காணிப்பு சுருளிஅருவியில் குறைவாகவே உள்ளது. பகல் நேரங்களில் போலீசார் இருப்பதில்லை. இங்கு ஏற்கனவே திறக்கப்பட்ட புறக்காவல்நிலையம் செயல்படாமலேயே உள்ளது. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் அச்ச உணர்வுடனே இருக்கின்றனர். சுற்றுலாபயணிகள் கூறுகையில், சுருளிஅருவியில் கடந்த சில தினங்களுக்கு முன்புதான் கொள்ளை நடந்தது. கோவிலில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். அப்படி இருந்தும் இதனை போலீசார் கண்காணிக்காமல் உள்ளனர். பகல் நேரங்களில் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு கூட பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது என்றனர்.

Tags : scene ,
× RELATED குழந்தைகளுக்கான படம் அயலான்: நடிகர் கருணாகரன் உற்சாகம்