டூவீலர்மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

திருப்புத்தூர், மே 8: சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே மானகிரி நெசவாளர்  காலனியை சேர்ந்தவர் குழந்தைசாமி மகன் ஜான்மார்சல்(19). இவர் கோவிலூர் கெமிக்கல் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று மாலை தனது நண்பரின் டூவீலரை வாங்கிக்கொண்டு வீட்டில் இருந்து மானகிரி வந்துவிட்டு, மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது மானகிரி பைபாசில் வரும்போது, ராமேஸ்வரத்திலிருந்து குன்றக்குடி துளாவூருக்கு வந்த கார் டூவீலர் மீது மோதியது. இதில் ஜான்மார்சலுக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அவரை காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து நாச்சியாபுரம் காவல்நிலைய எஸ்.ஐ.ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

× RELATED தக்கலை அருகே பரபரப்பு: தாறுமாறாக ஓடி...