×

ராமநாதபுரம் மாவட்டத்தில் கூடுதல் கண்காணிப்பு கேமரா வேகத்தடை அமைக்க நிதி ஒதுக்கீடு எஸ்.பி. தகவல்

ராமநாதபுரம், மே 8: ராமநாதபுரம் மாவட்டத்தில் சாலைகளில் வேகத்தடை,  கண்காணிப்பு காமிரா பொருத்த போக்குவரத்து பாதுகாப்பு நிதியின் மூலமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் வேகத்தடைகள் அமைக்கவும், ரூ.30 லட்சம் சாலை பாதுகாப்பிற்காக என மொத்தம் ரூ.65 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.  என எஸ்பி ஓம்பிரகாஷ்மீனா தெரிவித்தார்.இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறுகையில், மாவட்டத்தில் குற்றச்செயல்கள் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. விபத்தால் ஏற்படும் மரணங்கள், தற்கொலைகளுக்கு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டு வருகிறது. ராமநாதபுரத்தில் சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்திருப்பதாக புகார்கள் எழுந்த நிலையில், சம்பந்தப்பட்ட துறைகளுடன் சேர்ந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

ராமநாதபுரம் நகரில் சாலையில் போக்குவரத்தை ஓழுங்குபடுத்தவும், திருட்டு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவோரை எளிதில் அடையாளம் காணவும் 50க்கும் மேற்பட்ட கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு கண்காணித்து வருகிறோம். எதிர்பாராதவிதமாக வாகனங்கள் மோதி கேமராக்கள் சேதமடைந்து இணைப்பு துண்டிக்கப்படுகிறது. உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முக்கிய சாலைகள், சந்திப்புகளில் கூடுதல் காமிராக்கள் பொருத்தப்படும். நகரில் போக்குவரத்தை சீர்படுத்திட அனைத்து பகுதிகளிலும் கூடுதல் போக்குவரத்து போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.சாலை விதிகளை மீறுவோர்களை கண்காணிப்பு காமிரா மூலமாக பதிவு செய்ய நவீன காவல் கட்டுப்பாட்டு அறையில் கணினிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 130 இடங்களில் வேதத்தடை அமைக்க அடையாளம் காணப்பட்டுள்ளன என்றார்.

Tags : Spam ,Ramanathapuram district ,
× RELATED ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கரும்பு ஜூஸ், இளநீர் விற்பனை ஜோரு