×

திமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்

தூத்துக்குடி, மே 8: திமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தூத்துக்குடியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட சிலுவைப்பட்டி சந்திப்பில் தெற்கு மாவட்ட செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமையில் பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற திமுக பொருளாளர் துரைமுருகன் எம்எல்ஏ பேசுகையில், ‘‘தூத்துக்குடி தொகுதியை வளமாக்கும் திறமை கனிமொழிக்கு உண்டு. அண்ணா கட்சியை ஆரம்பித்த போது தூத்துக்குடியில் கருணாநிதி கொடியேற்றினார். அவரது வழியில் பணியாற்றி வரும் கனிமொழி, தனது எம்.பி. சம்பளத்தை ஆதரவற்றவர்களின் உதவிகளுக்கு வழங்கி வருகிறார். சோதனைகளையும், எதிர்ப்புகளையும் சந்தித்தவர்.
மாப்பிள்ளையூரணியில் தண்ணீர் பிரச்னை நிலவுகிறது. பேய்குளம் பெட்டைக்குளம் தண்ணீரை  கூட ஆட்சியாளர்கள் கொண்டு வரவில்லையே.

மத்தியிலும், மாநிலத்திலும் மாற்றம் வேண்டும் என்று பெண்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் விரும்புகின்றனர். வரும் 23ம் தேதிக்குப் பிறகு மோடியும், எடப்பாடியும் வீட்டிற்கு செல்வது உறுதி. இத்தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளர் சண்முகையாவை அமோக வெற்றிபெறச் செய்ய வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் முதியோர் உதவித்தொகை  ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். மக்கள் சந்தோசமே எங்கள் சந்தோசம்’’ என்றார்.

கூட்டத்தில் தூத்துக்குடி வடக்கு  மாவட்டச் செயலாளர் கீதாஜீவன் எம்எல்ஏ., ஓட்டப்பிடாரம் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ., எம்எல்ஏக்கள் ஆஸ்டின், மனோ தங்கராஜ்,  லட்சுமணன், முன்னாள் எம்பி. தங்கவேல், நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்,  விளாத்திகுளம் தொகுதி வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார், மாநில செய்தி தொடர்பு  செயலாளர் கே.எஸ். ராதாகிருஷ்ணன், மாணவர் அணி மாநில துணைச் செயலாளர்  உமரிசங்கர், பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர்  ஆனந்தசேகரன், ஒன்றியச் செயலாளர்கள் முருகேசன், காசிவிஸ்வநாதன்,

மாடசாமி,  வடக்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், தெற்கு மாவட்ட ம.தி.மு.க.  செயலாளர் புதுக்கோட்டை செல்வம், மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர்  கனகராஜ், மாவட்டச் செயலாளர் அர்ச்சுணன், வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர்  சீனிவாசன், மாநகர் மாவட்டத் தலைவர் முரளிதரன், சமத்துவ மக்கள் கழக மாவட்டச்  செயலாளர் அற்புதராஜ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்டச் செயலாளர்  மாரிச்செல்வம், மதிமுக மாவட்ட துணைச் செயலாளர் வீரபாண்டி செல்லச்சாமி,  மதிமுக ஒன்றியச் செயலாளர்கள் சரவணன்,


பேச்சிமுத்து, முருகபூபதி, தெற்கு  மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஜோதிராஜா, முன்னாள் ஒன்றியச் செயலாளர்  டி.டி.சி.ராஜேந்திரன்,  மீனவர் அணி மாவட்ட துணைச் செயலாளர் துறைமுகம்  புளோரன்ஸ், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அஜய்கோஸ், மாப்பிள்ளையூரணி ஊராட்சி  திமுக நிர்வாகிகள் அம்புரோஸ், தர்மலிங்கம், மரியஜான், நெல்சன்,  சப்பாணிமுத்து, காமராஜ், பொன்னுச்சாமி, கோவில்மணி, பாரதிராஜா, ஜோசியர்  முருகன், கணேசன், ரவி, மாநகர துணைச் செயலாளர் கீதாமுருகேசன், வக்கீல் அணி  நெல்லை தினேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 மாப்பிள்ளையூரணி ஊராட்சி  செயலாளர் சரவணக்குமார் நன்றி கூறினார்.

பெண்களுக்கு பாதுகாப்பில்லை

கூட்டத்தில் கனிமொழி எம்.பி பேசுகையில், ‘‘மக்களைப்பற்றி கவலைப்படாத முதல்வர் இபிஎஸ்சும், துணை முதல்வர் ஓபிஎஸ்சும் எம்எல்ஏவாக  இருப்பதற்குகூட தகுதியில்லாதவர்கள். ஜெயலலிதாவின் ஆசியோடு ஆட்சி செய்கிறோம்  எனக்கூறும் இவர்கள் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. படித்த  இளைஞர்களுக்கு வேலையில்லை. 100 நாள் வேலை ஒழுங்காக வழங்கப்படவில்லை.  அதற்குரிய பணமும் முறையாக மக்களுக்கு சேரவில்லை. தன்னை ஆளாக்கிய தலைமைக்கே  நம்பிக்கை துரோகம் செய்தவர்கள்.


கொடநாடு கொலை, கொள்ளை சம்பவங்களை மூடி  மறைத்தவர்கள். தூத்துக்குடியில் உரிமைக்காக போராடிய அப்பாவி மக்கள் 13 பேரை சுட்டுக்கொன்றவர்கள். இதுதான் தற்போதைய அதிமுக அரசின் சாதனைகளாகும்.  எதிர்கால தலைமுறை பாதுகாப்பாக இருப்பதற்கு திமுக வேட்பாளர் சண்முகையாவை  உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யவேண்டும்’’ என்றார்.

Tags : DMK ,elderly ,
× RELATED தூத்துக்குடி தொகுதியில் மீண்டும்...