×

மணப்பாறை மஸ்தான் தர்ஹாவில் சந்தனக்கூடு விழா

மணப்பாறை, மே 8:   மணப்பாறை வாகைக்குளம் ரோடு முஸ்லிம் கபரஸ்தானில் அடங்கி உள்ள மகான் ஹஜரத் ஹுசைன் மஸ்தான் தர்ஹாவில் 996ம் ஆண்டு சந்தனக்கூடு விழா நடந்தது.
 இந்த விழாவை பரம்பரை முத்தல்லி தௌலத் ஹுசைன்  கான் கொடி ஏற்றி துவைக்கி வைத்தார். புனிதம் நிறைந்த சந்தன குடம் பக்கிர்களின் சூபி இசையான தாயிரா இசை முழக்கத்துடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு மகான் சமாதியில் சந்தனம் பூசப்பட்டது.  இதனையொட்டி, சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, துணி மற்றும் மலர் போர்வை போர்த்தப்பட்டது. பின்னர் உலக நன்மைக்காகவும், மத நல்லினக்கம் மற்றும் சமய ஒற்றுமையை வலியுறுத்தியும் மழை வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடத்தப்பட்டது. இப்பிரார்த்தனையில் ஊரக வளர்ச்சித் துறை உதவித்திட்ட அலுவலர் சுல்தான் மக்தும் மற்றும் சிறுபான்மை பிரிவு இயக்க செயலாளர் இஸ்மாயில் கான் உட்பட சர்வ மதத்தினர் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை பரம்பரை முத்தவல்லி தௌலத் ஹுசைன் கான் செய்திருந்தார்.

Tags : ceremony ,Chandana Kootam ,Manpara Mastan Dharah ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா