×

வெவ்வேறு சம்பவங்களில் டீ மாஸ்டர் உள்பட 2 பேர் வெட்டிக்கொலை

திருச்சி, மே 8:  திருச்சி ஏர்போர்ட்டில் நடந்த இடத்தகராறில் டீ மாஸ்டரை வெட்டிக்கொலை செய்த தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர். இதுபோல மற்றொரு சம்பவத்தில் வாலிபர் வாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். திருச்சி ஏர்போர்ட் அருகே குலவாய்பட்டியை சேர்ந்தவர் பழனியாண்டி (70). இவரது மகன்கள் அப்பாவு (47), டீ மாஸ்டர், சந்தானம் (45), பழனியாண்டியின் தம்பி பொன்னுசாமி (60). இவர்களது உறவினர் சந்தானம் (45). மகன் பாலமுருகன். ஏர்போர்ட் பகுதியில் பழனியாண்டி தந்தைக்கு சொந்தமாக 42 சென்ட் இடம் உள்ளது. இந்த இடத்துக்கு சந்தானம் தரப்பினர் போலி பத்திரம் தயாரித்து தங்களது இடம் என கூறி வந்ததாக தெரிகிறது.

 இந்த இடம் தொடர்பாக பழனியாண்டி தரப்பினருக்கும், உறவினர் சந்தானம் தரப்பினருக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி பழனியாண்டி, தம்பி பொன்னுசாமி, மகன்கள் அப்பாவு, சந்தானம் ஆகிய 4 பேரும் அந்த இடத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு பைக்கில் வந்த சந்தானம், பாலமுருகன் ஆகியோர் பழனியாண்டி தரப்பினரிடம் தகராறு செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த சந்தானம், பாலமுருகன் பைக்கிலிருந்த அரிவாளை எடுத்து வந்து பழனியாண்டி, அப்பாவுவை சரமாரி வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.  இதில் பலத்த காயமடைந்த தந்தை, மகன் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

 இது குறித்து பழனியாண்டி அளித்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பியோடிய தந்தை, மகனை தேடி வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அப்பாவு நேற்று காலை இறந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிந்து சந்தானம், பாலமுருகனை தேடினர். இதற்கிடையே, கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி அப்பாவு உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்த ஆயத்தமாகினர். இதை தொடர்ந்து சந்தானம், பாலமுருகன் இருவரையும் போலீசார் கைது செய்ததாக தெரிவித்தை அடுத்து, போராட்டத்தை கைவிட்டு, அப்பாவு உடலை வாங்கிச் சென்றனர். இதனால் திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று பரபரப்பான சூழல் நிலவியது.

Tags : tea workers ,
× RELATED 8 லட்சம் தேயிலை தொழிலாளர்களை குறிவைக்கும் ‘நிதி’