×

ஊரணிகளில் சரள் மண் எடுப்பதா? கோவில்பட்டி ஆர்டிஓ அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி நூதன போராட்டம்

கோவில்பட்டி, மே 8: ஓட்டப்பிடாரம்  தாலுகா ஊரணிகளில் முறைகேடாக சரள் மண் அள்ளுவதை தடுத்து நிறுத்தக்கோரி கோவில்பட்டி ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் காங்கிரஸ் நிர்வாகி நூதன போராட்டம் நடத்தினார்.  தூத்துக்குடி  மாவட்ட காங்கிரஸ் வக்கீல்  பிரிவு தலைவர் அய்யலுச்சாமி.  ஓட்டப்பிடாரம் தாலுகா பரிவல்லிகோட்டை ஊரணி, பாண்டியாபுரம்  ஊரணியில் சரள் மண் இரவு நேரங்களில் முறைகேடாக அள்ளப்படுகிறது. இந்த  சரள்மண்ணை மீளவிட்டான் முதல் கடம்பூர் வரை போடப்பட்டுள்ள 2வதுரயில்வே  புதிய வழித்தடம் அமைக்க எடுத்து செல்கின்றனர்.

முறையாக மேற்கொள்ளாமல் சரள்மண்ணை கொள்ளையடித்து புதிய வழித்தடம் அமைக்கப்படுவதால் விவசாயம் பெரிதும் பாதிக்கப்படும். இவ்வாறு ஊரணிகளில் அனுமதியின்றி  முறைகேடா சரள்மண் எடுப்பதை தடுத்து நிறுத்தக்கோரி விவசாயிகள் பலமுறை அதிகாரிகளிடம் மனுக்கள் அளித்தும் நடவடிக்கை இல்லை.  

எனவே, பரிவல்லிக்கோட்டை, பாண்டியாபுரம் ஊரணியில் அனுமதியின்றி  முறைகேடா சரள்மண் எடுப்பதை தடுத்துநிறுத்தக்கோரி அய்யலுசாமி, தனது  தலைமையி சாந்து சட்டியுடன், உடல் முழுவதும் கோரிக்கை மனு மற்றும்  பத்திரிகைளில் வெளியாட செய்திகளுடன் கோவில்பட்டி ஆர்.டி.ஓ.அலுவலகத்திற்கு  நூதன போராட்டம் நடத்தினார். பின்னர் இதுகுறித்த கோரிக்கை மனுவை ஆர்டிஓ நேர்முக  உதவியாளர் சூர்யகலாவிடம் வழங்கினார்.

Tags : area ,administrator ,Congress ,Kovilpatti RTO ,
× RELATED சொத்தை எழுதி வைக்க மறுத்ததால்...