×

புதுக்கோட்டை பகுதியில் வீதிவீதியாக பிரசாரம் குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காண்பேன்

புதுக்கோட்டை, மே 8: புதுக்கோட்டை பகுதியில் வீதிவீதியாக பிரசாரம் மேற்கொண்ட ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா, குடிநீர் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண்பேன் என வாக்குறுதி அளித்தார்.  தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறும் 4 தொகுதிகளில் ஒன்றான ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வக்கீல் சண்முகையா, தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் புதுக்கோட்டை பகுதியில் மக்களை சந்தித்து ஓட்டு வேட்டையாடினார். புதுக்கோட்டை அருகேயுள்ள சிவஞானபுரம், தங்கம்மாள்புரம், சாயர்புரம் அருகே செந்தியம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்குசேகரிக்க வந்த அவருக்கு கட்சியினரும், பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

அப்போது அவர் பேசுகையில், ‘‘திமுக வெற்றிபெற்றதும் விவசாய, கல்வி கடன்கள் முற்றிலும் ரத்துசெய்யப்படும். இதை நாங்கள் மட்டுமே தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளோம். மத்தியில் உள்ள பா.ஜ. அரசும், அதன் கைப்பாவையாக தமிழகத்தில் உள்ள எடப்பாடி அரசும், விவசாயிகளை கண்டுகொள்வதே இல்லை. சிவஞானபுரம்  உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதாக  மக்கள் தெரிவித்தனர். நான் எம்எல்ஏ வாக தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில் தொகுதியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுப்பேன்’’ என்றார்.

முன்னதாக தங்கம்மாள்புரத்தில் வேட்பாளர் சண்முகையாவுக்கு திமுக பிரமுகர் எஸ்டிஆர் பொன்சீலன் தலைமையில் திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி ஒன்றியச் செயலாளர் மாடசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் பிரம்மசக்தி, ஏ.கே. பூபதி, கருணாகரன், தூத்துக்குடி வர்த்தக அணி அமைப்பாளர் மகேந்திரன், ஊராட்சி செயலாளர் தங்கதுரை, கிளைச் செயலாளர் பொன் ரத்தினராஜ் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகப் பங்கேற்று வாக்குசேகரித்தனர்.

வைகுண்டம்: இதே போல் வைகுண்டம் மேற்கு ஒன்றியம், புதுப்பட்டியில் பிரசாரம் மேற்கொள்ள வந்த திமுக வேட்பாளர் சண்முகையா, முத்தாரம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அப்பகுதியில் திரண்டிருந்த மக்களிடம் வாக்குசேகரித்துப் பேசுகையில், ‘‘சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் கொண்டு வந்து குடிநீர் பிரச்னை தீர்க்கப்படும். ஓட்டப்பிடாரம் பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் 6 ஆயிரம் வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 150 நாட்களாக உயர்த்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள அனைத்து வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படும்.

பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகாண உதயசூரியன் சின்னத்தில் வாக்கித்து என்னை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார்.
 பிரசாரத்தில் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சுரேஷ் ராஜன் எம்.எல்.ஏ., வைகுண்டம் ஒன்றியச் செயலாளர் கொம்பையா பாண்டியன், ஆழ்வார்திருநகரி ஒன்றியச் செயலாளர் பார்த்திபன், நகரச் செயலாளர்கள் பெருமாள், முத்துராமலிங்கம், ஊராட்சி செயலாளர்கள் முத்துராமலிங்கம், சுப்புராஜ், ஜெயராம், விவசாய தொழிலாளர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் பெரியதுரை, ஒன்றிய அமைப்பாளர் சின்னபாண்டி, எம்.ஜே.ராஜன், மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜகோபால், காங்கிரஸ் கட்சி தர்மராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் பங்கேற்று வாக்குசேகரித்தனர்.

Tags : Pudukottai ,street drinking campaign ,
× RELATED புதுக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி