×

திறனாய்வு தேர்வில் மாணவிகள் சாதனை

சிவகிரி, மே 8: மத்திய அரசின்  கல்வித்துறை, தேசிய வருவாய்வழி மற்றும் திறன்படிப்பு உதவித்தொகை  திட்டத்தின்கீழ் ஆண்டுதோறும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தேசிய திறனாய்வு தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த டிசம்பரில் 8ம் வகுப்பு மாணவ,  மாணவிகளுக்கு நடந்த தேசிய திறனாய்வு தேர்வில் வாசுதேவநல்லூர் நாடார்  உறவின்முறை காமராஜர் மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் பங்கேற்றனர். இதில் இப்பள்ளியைச் சேர்ந்த சண்முகமெலினா, நிரஞ்சனா, லாவண்யா, சுடலி அபி ஆகிய 4 மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தேர்ச்சி பெற்ற 4  மாணவிகளுக்கும் மத்திய அரசு மாதம் ரூ.500 வீதம் 9ம் வகுப்பு முதல் பிளஸ்2 முடிக்கும் வரை 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.24 ஆயிரம் வழங்கி  ஊக்குவிக்கிறது. வெற்றி பெற்ற 4 மாணவிகளையும் பள்ளி கமிட்டி தலைவர் தவமணி, கமிட்டி செயலாளர் சமுத்திரவேலு, தலைமை ஆசிரியர் குமரேசன்  மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

இதேபோல் கடையம்  அடுத்த காக்கையனூர் டிடிடிஏ நடுநிலைப்பள்ளி 8ம் வகுப்பு மாணவி ராமசதா,  2018-19ம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறனறி தேர்வில் வெற்றி  பெற்று சாதனை படைத்துள்ளார். வெற்றி பெற்ற மாணவியை பள்ளி தாளாளர் சற்குணம்,  பள்ளி தலைமை ஆசிரியை எபனேசர் மற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : Performance Test ,
× RELATED திறனாய்வு தேர்வில் மாணவிகள் சாதனை