×

தஞ்சை நிலைய தீயணைப்பு அலுவலகத்தில் ஆய்வு

தஞ்சை,மே8:தஞ்சை நிலைய தீயணைப்பு அலுவலகத்தில் மாவட்ட தீயணைப்பு அலுவலர் ஆய்வு நடத்தினார். தஞ்சை  அரண்மனை வளாகத்தில் நிலைய தீயணைப்பு அலுவலகம் உள்ளது. இந்த தீயணைப்பு  நிலையத்திற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் இளஞ்செழியன் நேற்று வந்தார். அப்போது அந்த தீயணைப்பு நிலையத்தில் இருந்த தீயணைப்பு வாகனங்களில் இயக்கம்
குறித்து ஆய்வு நடத்தினார். பின்னர் அலுவலகத்தில் உள்ள பணியாளர்களின்  சீருடைகள், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.  இதன் பின்னர்  கோடை காலமாக இருப்பதால் பல்வேறு இடங்களில் திடீரென தீப்பிடித்து விபத்து  ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தீவிபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ  இடத்துக்கு விரைந்து சென்று தீ தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென  அறிவுரை வழங்கினார்.


Tags : fire department office ,
× RELATED சிவகாசி தீயணைப்பு நிலையத்தில் பட்டாசு வியாபாரிகளுக்கு பயிற்சி