×

கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் பறிமுதல்

பாபநாசம், மே 8: கபிஸ்தலத்தில் உள்ள கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி மணல் அள்ளிய டிராக்டர் டிரைவர் கைது செய்யப்பட்டார். பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே கொள்ளிடம் ஆற்றில் அதிகளில் மணல் கொள்ளை நடக்கிறது என்று போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கபிஸ்தலம் அருகே பட்டுக்குடி பகுதியில் இன்ஸ்பெக்டர் அனந்த பத்பநாபன், சப்இன்ஸ்பெக்டர் ராகவன் மற்றும்  போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கொள்ளிடம் ஆற்றில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளுவது தெரியவந்தது. போலீசார் வருவதை பார்த்ததும் மணல் அள்ளியவர்கள் டிராக்டரை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடினர். இதையடுத்து கபிஸ்தலம் போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்ததுடன் தப்பியோடிய டிராக்டர் டிரைவர் உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

Tags : Sandy ,river ,
× RELATED மருத்துவமனைக்கு செல்ல போலீசார்...