×

வரும் 14ம் தேதி ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து கலெக்டர் எச்சரிக்கை

தஞ்சை, மே 8: தஞ்சை மாவட்டத்தில் வரும் 14ம் தேதி நடைபெறும் ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களின் அனுமதி ரத்து செய்யப்படும் என்று கலெக்டர் அண்ணாதுரை எச்சரிக்கை விடுத்துள்ளார். தஞ்சை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் வகையில் மாவட்ட அளவில் குழுக்களை அமைத்து மாவட்டத்தில் சாலை பாதுகாப்பு குறித்து பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சாலை பாதுகாப்பு குறித்து அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களின் இயக்கத்தை முறைப்படுத்தவும், டிரைவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு மேம்படுத்தவும் அனைத்து பள்ளி வாகனங்களும் ஒரே இடத்தில் ஒரே நாளில் ஆய்வு செய்யப்படவுள்ளது.

இதன்படி வரும் 14ம் தேதி காலை தஞ்சை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள், தஞ்சை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆய்வு செய்யப்படுகிறது. பட்டுக்கோட்டை வட்டார போக்குவரத்து அலுவலக எல்லைக்கு உட்பட்ட பள்ளி வாகனங்கள், கைகாட்டி அரசு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் ஆய்வு செய்யப்படுகிறது. எனவே பதிவு சான்று, காப்பு சான்று, அனுமதி சீட்டு, நடப்பு புகைச்சான்று, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் வாகனங்களை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்களின் அனுமதி சீட்டு ரத்து செய்யப்படும். இவ்வாறு தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Tags : school ,
× RELATED சேம்பார் பள்ளியில் மாணவர் சேர்க்கை பேரணி