×

கும்பகோணத்தில் ஒரே இடத்தில் 12 கருட சேவை

கும்பகோணம், மே 8: ஆண்டுதோறும் சித்திரை மாதம் வளர்பிறையில் அமாவாசைக்கு பிறகு வரும் 3வது திதியான அட்சய திருதியை தினத்தில் கும்பகோணத்தில் உள்ள 12 வைணவ கோயில்களில் இருந்து 12 கருட வாகனங்களில் உற்சவ பெருமாள் சுவாமி புறப்பட்டு டிஎஸ்ஆர் பெரிய தெருவில் அலங்கார பந்தலில்  ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலிப்பது வழக்கம்.  அதன்படி அட்சய திருதியை நாளான நேற்று  கும்பகோணம்  டிஎஸ்ஆர் பெரிய தெருவில் காசிக்கடை வர்த்தகர் சங்கம் சார்பில் அமைக்கப்பட்டிருந்த   அலங்கார பந்தலில் கருடசேவை நடந்தது. இதில் சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி, ராமசுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபால சுவாமி, பாட்சாரியார் தெரு கிருஷ்ண சுவாமி, வெங்கட்ராயர் அக்ரகாரம் பட்டாபிராம சுவாமி, சோலையப்ப முதலியார் அக்ரகாரம் ராமசுவாமி, மல்லுகச்செட்டித்தெரு சந்தான கோபாலகிருஷ்ண சுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட பெருமாள் கோயில்களின் உற்சவ பெருமாள்கள் கருட வாகனத்தில் எழுந்தருள நேர் எதிரே ஆஞ்சநேய பெருமாள் என 12 கருட சேவை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Kumbakonam ,
× RELATED பேருந்து ஓட்டுனரை தாக்கியவர்களை கைது...