×

குற்றாலம் புலியருவி வனப்பகுதியில் கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்பு

தென்காசி, மே 8: குற்றாலத்தில் புலியருவி வனப்பகுதி கிணற்றில் தவறி விழுந்த மானை வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் உயிருடன் மீட்டனர். குற்றாலம் குடியிருப்பு பீட் புலியருவி அருகே உள்ள வனப்பகுதியில், நேற்று மாலை வனவர் பாண்டியராஜ் தலைமையில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து சத்தம் கேட்கவே வனத்துறையினர் சென்று பார்த்தனர். கிணற்றில் புள்ளிமான் தத்தளித்தது தெரிந்தது.

உடனடியாக வனவர் பாண்டியராஜ் தென்காசி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். நிலைய அலுவலர் (பொறுப்பு) விஜயன், ஏட்டு செல்வம், வீரர்கள் சுடர்மணி, பூபாலன், செந்தில்குமார் ஆகியோர் விரைந்து வந்தனர். அவர்களுடன் வனவர் பாண்டியராஜ், வனக்காப்பாளர் ஐயப்பன், வேட்டைத்தடுப்பு காவலர் செண்பகம், வனராஜ், முருகையா ஆகியோர் 25 அடி ஆழமுள்ள கிணற்றில் தத்தளித்த 2 வயதுடைய புள்ளிமானை கயிறுகட்டி உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

Tags : deer survivor ,Puliyaruvi ,forest ,Courtallam ,
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...