×

எஸ்எஸ்எல்சி, பிளஸ்2 தேர்வில் வள்ளுவர் வாசுகி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

மேட்டூர், மே 8: பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகளில் மேட்டூர் வள்ளுவர் வாசுகி பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. மேட்டூரை அடுத்த நாட்டாமங்கலத்தில் செயல்பட்டு வரும் வள்ளுவர் வாசுகி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு சிறந்த ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படுவதால் ஆண்டுதோறும் நடக்கும் பொதுத்தேர்வுகளில் பள்ளி சாதனை படைத்து வருகிறது. பத்தாம் வகுப்பில் 475 மதிப்பெண்கள் பெற்று பிளஸ் 1 வகுப்பில் சேரும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் மற்றும் விடுதி கட்டணத்தை பள்ளி நிர்வாகமே ஏற்கிறது.

460 மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு 50 சதவீதம்  கட்டண சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நீட் தேர்வுக்கு பயிற்சி கட்டணம் இல்லை.  பள்ளி பேருந்துகளில் மாணவ, மாணவிகள் கட்டணமின்றி பயணம் செய்யும் வசதி செய்து தரப்பட்டுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக தலைசிறந்த ஆசிரியர்களை கொண்டு நடத்தப்படும் பள்ளியில், மாணவ மாணவிகளுக்கு தனித்தனி விடுதி வசதி உள்ளதாக பள்ளி நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Valluvar Vasuki School ,
× RELATED ₹1.50 லட்சம் கொள்ளை