×

ரம்ஜான் பண்டிகையையொட்டி பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகை

புதுக்கோட்டை, மே 8: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பகுதிகளில் ரம்ஜான் நோன்பு தொடங்கியதையொட்டி நேற்று முதல் நாள் முதல் இரவு நேரங்களில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன. இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகைக்கு முன் 30நாட்கள் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். அதன்படி  முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், இலுப்பூர், பரம்பூர், வயலோகம், குடுமியான்மலை, பெருமநாடு,  காலாடிப்பட்டி, சத்திரம், ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள இஸ்லாமியர்கள் கடந்த திங்கள்கிழமை இரவு முதல் சிறப்பு தொழுகையுடன் நோன்பு வைக்க தொடங்கினர். இந்த நோன்பானது அதிகாலை முதல் மாலை வரை கடைபிடிப்பது வழக்கம். அதனை தொடர்ந்து மாலையில் நோன்பு திறக்கப்படும்.
அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை முக்கண்ணாமலைப்பட்டி மதினா பள்ளிவாசலில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு நோன்பு திறந்தனர்.

Tags : school gates ,Ramzan Festival ,
× RELATED பெரம்பலூர் மாவட்டத்தில் 56 பள்ளிவாசல்களில் ரம்ஜான் சிறப்பு தொழுகை