×

ஆர்எஸ்பதி மரங்களை அழித்து காப்பு காடுகளை உருவாக்க வேண்டும் கலெக்டரிடம் மனு

புதுக்கோட்டை, மே 8: ஆர்எஸ்பதி மரங்களை அழித்து காப்பு காடுகளை உருவாக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநிலபொது செயலாளர் தனபதி புதுக்கோட்டை கலெக்டர் உமாமகேஸ்வரிக்கு மின் அஞ்சல் வழியாக அனுப்பிய மனுவில் கூறியிருப்பதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்த சுமார் 75,000 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட காப்புக்காடுகள் மற்றும்  வனப்பகுதி வன தோட்ட கழகத்திற்கு ஒப்படைக்கப்பட்டு இந்த காடுகளில் இருந்த பல மரங்கள், பழ மரங்கள், புதர்க்காடுகள், முந்திரிக்காடுகள், அழிக்கப்பட்டு வனத்தோட்டக்கழகத்தின் மூலமாக தைல மரங்கள் வளர்க்கப்பட்டு இந்த காடுகளில் வாழ்ந்த மயில், குரங்கு, நரி, மான்கள், காட்டு மாடுகள், பல்வேறு பறவைகள், சிற்றுயிரினங்கள் தங்கள் வாழ்விடங்களை இழந்து உணவும் தண்ணீரும் இல்லாமல் மாய்த்து விட்டது. இவைகளில் ஒரு சில மயில், குரங்கு, போன்றவை, நகரம், கிராம பகுதி போன்றவற்றில் தஞ்சம் புகுந்து உயிர் வாழ்ந்து வந்தது கடந்த கஜா புயலால் கிராமப்பகுதியில் இருந்த மரங்கள் அழிந்துவிட்டது.

இதனால் மயில்களுக்கு வாழ்விடம் இல்லாமல் போனது புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் சுமார் 500 மயில்களுக்கு மேல் வாழ்ந்து வந்தது. கடந்த 5 மாதமாக இவைகளுக்கு குடிநீர், உணவு, இல்லாமல் போனதாலும் மயில்களை பலர் திருட்டுத்தனமாக வேட்டையாடி கொன்றுவிட்டதாலும் தற்போது மயில்களின் எண்ணிக்கை வெகு வேகமாக குறைந்துவிட்டது. தற்போது 200க்கு குறைவான எண்ணிக்கையில் இருப்பதாக தெரிய வருகிறது. நமது மாவட்டத்தில் உள்ள காப்புக்காடுகளில் வனத்தோட்டக்கழகத்தால் வளர்க்கப்பட்டு வரும் தைல மரங்களை அப்புறப்படுத்தி பலன் தரும் மரங்களையும், சூழியல் காடுகளையும் உருவாக்க நடவடிக்கை எடுக்க பலமுறை கலெக்டரகும், அரசுக்கும், வனத்துறைக்கும் வனத்தோட்டக்கழகத்திற்கும் மனுக்கள் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. உடனடியாக மாவட்டத்தில் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட தைல மரங்களை அப்புறப்படுத்தி சூழியல் காடுகள் உருவாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குட்டைகள், தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி மயில்கள் மற்றும் பறவைகளை காக்கவேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : petitioner ,collector ,RSP ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...