×

புதுச்சத்திரம் வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதல்

சேந்தமங்கலம், மே 8: புதுச்சத்திரம் வட்டாரத்தில், மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்துவது குறித்து வேளாண் அதிகாரி விளக்கமளித்தனர். புதுச்சத்திரம்  வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பேபிகலா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சத்திரம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் தற்சமயம் சோளம் மற்றும் பாசிப்பயிறு சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். கடந்த ஆண்டு மக்காச்சோள பயிர்களை தாக்கிய அமெரிக்க படைப்புழுக்கள், இந்த வருடமும் மக்காச்சோளப் பயிர்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் அனைவரும் இப்புழுக்களை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விழிப்புணர்வு அடையவேண்டும்.
 
இதன் படி மே மற்றும் ஜூன் மாதங்களில் கோடை உழவு செய்வதன் மூலம் கூட்டுப்புழுக்களை அழித்திடலாம். அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்ய வேண்டும். அதிக இடைவெளி விட்டு மக்காச்சோள விதைகளை விதைக்க வேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோள பயிர்களில் அமெரிக்க படைப்புழு அதிக அளவில் தாக்கும்.

அதற்கு ஊடுபயிர் மற்றும் வயல் ஓரபயிர் சாகுபடி மக்காச்சோளம் விதைப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே தட்டைப்பயிறு, சூரிய காந்தி ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இனக்கவர்ச்சி பொறி வைத்தல் எக்டருக்கு 12 எண்கள் வீதம் வைத்து அந்துப்பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

வேப்ப எண்ணைய் கரைசல் தெளித்தல்:
விதைத்த 7 ம் நாள் அசாடிராக்டின் தண்ணீர் கலந்து தெளிப்பதன் மூலம் தாய் அந்துப்பூச்சிகள் பயிரில் முட்டைகள் இடுவதை தவிர்க்கலாம். விதைத்த 15 முதல் 20 நாட்களுக்கு மீண்டும் தெளித்தல் வேண்டும். சாம்பல், மணல் ஆகியவற்றை குருத்தில் இடுவதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : New Birthplace ,
× RELATED புதுச்சத்திரம் வட்டாரத்தில் வேளாண் வளர்ச்சி பணிகள்