×

ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளி 100 % தேர்ச்சி

பெரம்பலூர், மே 8: பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சி பொதுத்தேர்வில் பெரம்பலூர் ஹேன்ஸ் ரோவர் பப்ளிக் பள்ளி 100 சதவிகித தேர்ச்சி பெற்றுள்ளது. இப்பள்ளியில் தேர்வெழுதிய மாணவர்கள் 11, மாணவிகள் 11 என மொத்தம் 22 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி ச. ஐஸ்வர்யா 478 மதிப்பெண்களுடன் முதலிடத்தையும்,சு. இஷித்தா பௌத் 459 மதிப்பெண்களுடன் இரண்டாவது இடத்தையும், தே.தீபக் 458 மதிப்பெண்களுடன் மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.சிறப்பிடம் பெற்ற மாணவ,மாணவிகளை ரோவர் கல்விக்குழும தலைவர் தாளாளர் வரதராஜன் மற்றும் மகாலட்சுமி வரதராஜன், பள்ளி முதல்வர் ஷோபனா, துணை முதல்வர் அந்தோணி டேவிட் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Hans Rover Public School ,
× RELATED பெண்ணை தாக்கி மிரட்டிய இருவர் கைது