×

போச்சம்பள்ளி பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சரிவால் காற்று வாங்கும் போர்வெல்கள்

போச்சம்பள்ளி, மே 8:  போச்சம்பள்ளி தாலுகாவில் வரலாறு காணாத அளவிற்கு கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. பிப்ரவரி மாதம் முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து, 100 டிகிரி வரை பதிவானது. வெயில் சுட்டெரித்து வருவதால் ஏரி, குளம், குட்டைகள் முற்றிலும் வறண்டு விட்டன. நிலத்தடி நீர்மட்டமும் வேகமாக சரிந்து, கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகள் வறண்டு, கடும் குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளது. 400 முதல் 500 அடி வரை இருந்த நீரோட்டம் தற்போது 1000 அடி வரை சென்றுவிட்டது. குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்த ஆழ்துளை கிணறுகள் வறண்டு போனதால், பொதுமக்கள் தவிப்பிற்குள்ளாகியுள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘ஒகேனக்கல் கூட்டு குடிநீர் பல்வேறு கிராமங்களுக்கு முழுமையாக கிடைக்காததால் குடிக்கவும், பாசன தேவைக்கும் முழுக்க முழுக்க ஆழ்துளை கிணற்று நீரையே நம்பி இருந்தோம். ஆனால், கடும் வறட்சியின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதால், ஆழ்துளை கிணறுகள் அனைத்தும் காற்று வாங்குகிறது. விவசாய கிணறுகளிலும் தண்ணீர் வற்றி விட்டதால், லட்சகணக்கணக்கில் செலவு செய்து தூர்வாரியும் தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, போச்சம்பள்ளி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் சீராக கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஆழ்துளை கிணறுகளை சீரமைக்க வேண்டும்,’ என்றனர்.

Tags : battles ,area ,Pochampalli ,
× RELATED வாட்டி வதைக்கும்...