×

சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா விடிய விடிய நடந்தது

பெரம்பலூர், மே 8: சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயில் தேரோட்டத்தையொட்டி பூச்சொரிதல் விழா நேற்றிரவு துவங்கி விடிய விடிய நடந்தது.பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. சிலப்பதிகார காலத்தில் தவறான அர சநீதியால் கணவனை இழந்த ஆத்திரத்தில் மதுரையை எரித்த கண்ணகி, சிறுவாச்சூரில் வந்து தங்கி இளைப்பாறியபோது சினம் தனிந்ததாக கூறப்படுகிறது. கண்ணகியின் சினம் தனித்த ஸ்தலமாகவும், ஆதிசங்கரர் வழிபாடு செய்ததும், ஊமையும், செவிடும் நீக்கும் சக்திநாயகியாய் நின்று அருளுவதும், மலடு நீக்கி மக்கட்பேறு அளிக்கும் வரப்பிரசாதமாக மதுரகாளியம்மன் கோயில் திகழ்கிறது.

 இந்த கோயிலின் தேரோட்ட விழா வருகிற 23ம் தேதி நடக்கிறது. இதையொட்டி நேற்று பூச்சொரிதழ் விழா நடந்தது. நேற்று காலை 11மணிக்கு இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் முருகையா, செயல் அலுவலர் பாரதிராஜா முன்னிலையில் மூலவருக்கு அபிஷேகம், உச்சிகால பூஜையும் நடந்தது. இரவு 10 மணிக்கு கோயில் நடையிலிருந்து பொதுமக்களுடன் பூ கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாற்றப்பட்டது. இரவு 11 மணி முதல் இன்று (8ம் தேதி) காலை 10 மணி வரை வெளியூர்களில் இருந்து கொண்டு வரப்பட்ட பூ அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதில் பெரம்பலூர், நெடுவாசல், நாரணமங்கலம், மருதடி, குரும்பலூர், பாளையம், செங்குணம், லாடபுரம், அம்மாப்பாளையம், பாடாலூர், வாலிகண்புரம் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து வாகனங்களில் பூ கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு விடிய விடிய சாற்றப்பட்டது.

Tags : Madurakaliyamman ,temple ,Chavavachur ,
× RELATED தீபாவளியை ஒட்டி கடைகளில் அலைமோதும்...