×

போச்சம்பள்ளி பகுதியில் சுட்டெரிக்கும் வெயிலால் இளநீர் விற்பனை அதிகரிப்பு

போச்சம்பள்ளி, மே 8: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றுப்படுகை பகுதிகளில், அதிகளவில் தென்னை மரங்கள் உள்ளன. குறிப்பாக காவேரிப்பட்டணம், நெடுங்கல், அகரம், மருதேரி, செல்லம்பட்டி, பாரூர், மஞ்சமேடு, புங்கம்பட்டி, கீழ்குப்பம், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில், சுமார் 36 ஆயிரம் ஏக்கரில் 15 லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. போச்சம்பள்ளி தேங்காய்க்கு சென்னை கோயம்பேடு மார்க்கெட் மட்டுமின்றி அண்டை மாநிலங்களிலும் மிகுந்த வரவேற்பு உள்ளது.

இந்நிலையில், பருவமழை பொய்த்ததால், பெரும்பாலான தென்னை மரங்கள் பட்டுப்போயின. இதனால், தேங்காய் மகசூலும் குறைந்தது. தற்போது, போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வருகிறது. வெயில் சுட்டெரிப்பதால், இளநீர் விற்பனை அதிகரித்துள்ளது. ஆனால், தேவை அதிகரிப்பால், விலை அதிகரித்து இளநீர் ₹25 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

Tags : area ,Pochampalli ,
× RELATED வாட்டி வதைக்கும்...