×

முலாம்பழம் விற்பனை ஜோர்

போச்சம்பள்ளி, மே 8:  போச்சம்பள்ளியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை தணிக்க இளநீர், தர்பூசணி, முலாம்பழம் போன்றவற்றை அதிகளவில் உட்கொள்ள தொடங்கியுள்ளனர். இதை தொடர்ந்து ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து முலாம்பழத்தை வியாபாரிகள் மொத்தமாக வாங்கி வந்து, டெம்போவில் குவித்து வைத்து விற்பனை செய்து வருகின்றனர். மற்ற பழங்களை காட்டிலும் முலாம்பழம் விலை குறைவாக இருப்பதால், பொதுமக்கள் அதிகளவில் வாங்கிச் செல்கின்றனர். போச்சம்பள்ளி பகுதியில், தற்போது கிலோ ₹20க்கு முலாம்பழம் விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
× RELATED காவேரிப்பட்டணத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்