×

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி

கிருஷ்ணகிரி, மே 8: சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியானது. இதில், கிருஷ்ணகிரி நாளந்தா சர்வதேச பொதுப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்த 65 மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர். இதில், 12 மாணவர்கள் 500க்கு 450 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். 34 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக ஸ்ரீஷ்மா என்ற மாணவி 500க்கு 489 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், மாணவி சூர்யா 481 மதிப்பெண்கள் பெற்று 2ம் இடத்தையும், ரேவதி 479 மதிப்பெண்கள் பெற்று 3ம் இடத்தையும் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பாடவாரியாக கணிதத்தில் 2 மாணவர்கள், அறிவியலில் 2 மாணவர்கள், சமூக அறிவியலில் 3 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர். இதேபோல், ஆங்கிலத்தில் 10 மாணவர்கள், தமிழில் 20 மாணவர்கள், கணிதத்தில் 20 மாணவர்கள், அறிவியலில் 10 மாணவர்கள், சமூக அறிவியலில் 36 மாணவர்கள் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.

சாதனை படைத்த மாணவர்களை  பள்ளியின் நிறுவனர் ஆடிட்டர் கொங்கரசன், தாளாளர் சாமுண்டீஸ்வரி கொங்கரசன், நிர்வாக இயக்குநர்கள் வழக்கறிஞர் கௌதமன், டாக்டர். புவியரசன், முதல்வர் மற்றும் துணை முதல்வர், ஆசிரிய, ஆசிரியர்கள் பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பெற்றோர்களும் கலந்துகொண்டனர். சாதனை படைத்த மாணவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது.

Tags : Nalanda International Public School ,CBSE ,
× RELATED திருப்புத்தூர் அருகே மவுண்ட் சீயோன்...