வணிகர் சங்க கூட்டம்

தர்மபுரி, மே 8: தர்மபுரி மாவட்டம், பொம்மிடியில், அனைத்து வணிகர் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தத. தலைவர் ஆசாம்கான் தலைமையில் வகித்தார். கூட்டத்தில், வணிகர் சங்க செயலாளர் குமார், இளையராஜா, பொருளாளர் மலையப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பொம்மிடி அரசு மருத்துவமனை 24 மணி நேரமும் செயல்படும் வகையில், மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும். பொம்மிடி ரயில்வே ஸ்டேஷன் எதிரில் ஏற்படும் போக்கு வரத்து நெரிசலை கட்டுப்படுத்த, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கத்துக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

× RELATED வணிகர் சங்க கூட்டத்தில் தீர்மானம்:...