காரிமங்கலத்தில் வணிகர் சங்க செயற்குழு கூட்டம்

காரிமங்கலம், மே 8: காரிமங்கலத்தில் நகர வணிகர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, தர்மபுரி மாவட்டம் மற்றும் சேலம் மண்டல தலைவர் வைத்திலிங்கம் தலைமை வகித்தார். காரிமங்கலம் நகர வணிகர் சங்க தலைவர் மாது வரவேற்றார். இதில், தர்மபுரி மாவட்ட செயலாளர் கிரிதர் மற்றும் பொறுப்பாளர் ரவிச்சந்திரன், வணிகர் சங்க செயலாளர் சிவக்குமார், பொருளாளர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் கலந்து கொண்டார்.

இதில், காரிமங்கலம் நகர வணிகர்கள் சங்கத்திற்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். பிளாஸ்டிக் பைகள் இல்லாத நகரமாக, காரிமங்கலத்தை மாற்றிட வேண்டும். காரிமங்கலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள வணிகர்களுக்கு, தராசு முத்திரையிட முகாம் அமைத்துத் தர வேண்டும். காரிமங்கலம் நகரத்தில் அனைத்து பேருந்துகளும் வந்து செல்ல வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ரவி நன்றி கூறினார்.

× RELATED காரிமங்கலத்தில் பிளாஸ்டிக் தீமை குறித்த விழிப்புணர்வு கூட்டம்