×

ஜப்பானில் காரைக்கால் மாணவர் தொழில் நுட்ப உரை கலெக்டர் பாராட்டு

காரைக்கால், மே 8: ஜப்பானில் காரைக்கால் மாணவர் தொழில் நுட்ப உரை நிகழ்த்தியதற்கு மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார். மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை மூலம் பல்வேறு மாநிலங்களிலிருந்து அறிவியல் ஆற்றல் மிகுந்த 70 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஜப்பான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முகமை அந்நாட்டில் ஏப்ரல் 20 முதல் 26ம் தேதி வரை இந்த மாணவர்கள் பங்கேற்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தியது. காரைக்கால் ஓ.என்.ஜி.சி. பொதுப்பள்ளியில் பிளஸ் 2 பயிலும் மாணவர் சிபிஷா மானக் ஷா இதில் பங்கேற்றார். இந்த எழுபது மாணவர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டு, ஜப்பானிலுள்ள இந்திய தூதரகத்தில் உரையாற்றினார்.

மேலும் அங்குள்ள அறிவியல் அருங்காட்சியகம், பேரிடர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம், கலாச்சார மையங்கள், கிஸாராசு தேசிய தொழில்நுட்ப கல்லூரி ஆகியவற்றை கண்டுகளித்தார். நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யோஷினொரி ஒஹ்சுமியின் உரை, பன்னாட்டு மாணவர்களுடன் கலந்துரையாடல் போன்றவற்றில் பங்கேற்று அண்மையில் காரைக்கால் திரும்பினார். இவரை காரைக்கால் மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா வாழ்த்தி பாராட்டினார்.

Tags : Karaikal ,student tech collector ,Japan ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...