×

கொள்முதல் பணியாளர்களிடம் இழப்பீடு தொகை வசூலிப்பதை கைவிடக் கோரி ஆர்ப்பாட்டம்

நாகை, மே 8:கொள்முதல் பணியாளர்களிடம் இழப்பீடு தொகை வசூலிப்பதை கைவிடக்கோரி ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு தொழிலாளர் சங்கம் (ஏ.ஐ.டி.யூ.சி.) சார்பில்  நாகை மண்டல அலுவலகம் முன் உரிய முன்னேற்பாடுகள் செய்து கொள்முதலில் விவசாயிகளுக்கு ஏற்படுகின்ற இடர்பாடுகளை போக்கிட வேண்டும், மின்னணு பண பரிமாற்றத்தை விரைவுப்படுத்தி விவசாயிகள் விற்பனை செய்கின்ற நெல்லுக்கு உடனுக்குடன் பணப்பட்டுவாடா செய்ய வேண்டும் என வலியுறுத்த வேண்டும், கொள்முதல் நிலையங்களில் இருந்து நிர்வாகம் உடனுக்குடன் இயக்கம்  செய்யாததால் ஏற்படுகின்ற  எடை இழப்பை நியாயமற்ற முறையில் கொள்முதல் பணியார்கள் மீது சுமத்தக்கூடாது.

கொள்முதல் பணியாளர்களிடம் இழப்புத் தொகை வசூல் செய்வதை கைவிட வேண்டும். ஒவ்வொரு நெல் கொள்முதல் நிலையத்திலிருந்தும் இருப்பு இழப்பு முன்மொழிவு பெற்று பரிசீலனை  செய்து இருப்பு இழப்பு அனுமதி  வழங்கிட வேண்டும். நிரந்தரப்படுத்தப்பட்டுள்ள கொள்முதல் பணியார்களுக்கு இழப்பு தொகையை காரணம் காட்டாமல் நிபந்தனையின்றி நிரந்தர பணியில் சேர அனுமதித்திட வேண்டும் என வலியுறுத்தி  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்  மாநில துணைத் தலைவர் கோதண்டபாணி, சுமைதூக்கும் தொழிலாளர் சங்க மாநில துணைத் தலைவர்  ராஜ்மோகன், மாநில செயலாளர் கிருஷ்ணன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட செயலாளர் ராமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்

Tags : Demonstration ,purchase ,
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்