×

நாகை மாவட்டத்தில் குவாரிகளில் விதிமுறை மீறி மணல் எடுத்தால் நடவடிக்கை எஸ்பி எச்சரிக்கை

சீர்காழி, மே 8: நாகை மாவட்டத்தில் குவாரிகளில் விதிமுறை மீறி மணல் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்பி விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாகை மாவட்டத்தில் சீர்காழி, கொள்ளிடம், மணல்மேடு, மயிலாடுதுறை, திருக்கடையூர், வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளில் அமைந்துள்ள தனியார் மணல் குவாரிகளில் விதிகளை மீறி சட்டத்திற்கு புறம்பாக அதிகளவில் மண் எடுப்பதாக நாகை எஸ்பி விஜயகுமாருக்கு புகார் சென்றது. இதனைத் தொடர்ந்து நாகை எஸ்பி விஜயகுமார் உத்தரவின்பேரில், சீர்காழி டிஎஸ்பி வந்தனா தலைமையில் போலீசார் வேட்டங்குடி, தொடுவாய், வழுதலைகுடி தனியார் மணல் குவாரிகளில் ஆய்வு நடத்தினர். இதில் சில குவாரிகளில் அரசு விதிமுறைகளை மீறி மணல் எடுத்ததாக தெரியவந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த மணல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். நாகை மாவட்டத்தில் தனியார் மணல் குவாரிகளில் சட்ட விதிமுறைகளை மீறி அதிக அளவில் மணல் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நாகை எஸ்பி விஜயகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : SBI ,district ,Naga ,
× RELATED தேர்தல் பத்திரங்கள் தொடர்பான அனைத்து...