×

மகா மாரியம்மன் கோயில் திருவிழா குளித்தலையில் 4 இடங்களில் செயற்கை நீரூற்று அமைப்பு

குளித்தலை மே 8: கரூர் மாவட்டம் குளித்தலை மகாமாரியம்மன் கோயில் திருவிழாவினையொட்டி கடந்த 5ம் தேதி கம்பம் நடுவிழா, பூச்சொரிதல் விழா நடைபெற்றது.இந்நிலையை தொடர்ந்து 15 நாட்கள் திருவிழா நடைபெறும்.  தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரியில் நீராடி தீர்த்தக்குடம் எடுத்து வந்து கோயில் முன்பு வைக்கப்பட்டு புனிதமாகப் போற்றப்படும்.  கம்பத்திற்கு வந்து வழிபடுவது வழக்கமாகும்.  மேலும் முக்கிய விழாவான மே 19ல் பெரியபால்குடம் எடுத்த பிறகு 20, 21ம் தேதி சுற்றுவட்டாரத்தில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அலகு குத்தி, அக்னிச்சட்டி, தொட்டி கட்டி நேர்த்திக் கடன் செலுத்த வருவார்கள்.

அப்போது  காவிரி நதிக்கரையில் நீராடி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.  தற்போது காவிரியில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் பக்தர்கள் பயன்படும் வகையில் குளித்தலை நகராட்சி சார்பில் கடம்பன் துறை, மணத்தட்டை, ஹய்ஸ்கூல் துறை, பெரியபாலம் பரிசல் துறை ஆகிய 4 இடங்களில் சென்ற ஆண்டு ஆழ்குழாய் அமைத்து செயற்கை நீரூற்றை பக்தர்கள் பயன்படுத்தும் வகையில் போடப்பட்டது. அதே போல் இந்த ஆண்டும் பக்தர்கள் வசதிக்காக செயற்கை நீரூற்று ஏற்படுத்தி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ள செய்தி  நேற்று தினகரன் நாளிதழில் வெளியானது.இதையடுத்து குளித்தலை நகராட்சி சார்பில் 4 இடங்களில் செயற்கை நீரூற்று பொதுமக்கள், பக்தர்கள் நீராடும் வகையில் அமைக்கப்பட்டது. இதையொட்டி  செய்தி வெளியிட்ட தினகரன் நாளிதழுக்கும், செயற்கை நீரூற்று ஏற்பாடு செய்த நகராட்சி நிர்வாகத்திற்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

Tags : fountain ,places ,Maha Mariamman Temple Festival Bath ,
× RELATED தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு ஓரிரு...