×

வறட்சியால் நீரின்றி வறண்டு கிடக்கும் தவிட்டுபாளையம் குளம்

கரூர், மே 8: காவிரியாற்றங்கரையில் உள்ள தவிட்டுப்பாளையம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின்கீழ் குளம் அமைக்கப்பட்டது. மழைக்காலத்தில் இந்த குளத்தில் நீர் இருக்கும். மழைநீர் சேகரிப்பு அமைப்பாகவும் இருந்தது. மழைக்காலம் முடிந்த பின்னரும் நடுவில்உள்ள நீர்அமைப்பில் நீர் இருக்கும். பொதுமக்கள் இந்த நீரைப் பயன்படுத்தி வந்தனர். காவிரியில் பெருவெள்ளம் ஏற்பட்டபோது குளம்நிரம்பி காணப்பட்டது.

இப்போது கடும்வறட்சி காரணமாக குளம் வறண்டுபோய் கிடக்கிறது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை தர கர்நாடகம் தொடர்ந்து மறுத்துவருகிறது. மத்திய, மாநில அரசுகளும் உரிய நீரைப்பெற எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. பெருமழைபெய்தால் தான் இந்த குளம் நிரம்பும் என இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

Tags : Drought ,Pillipalayam Pond ,
× RELATED “வறட்சியால் கருகும் தென்னை மரங்கள்”.....