×

மாவட்ட செயலாளர் அதிருப்தியால் அமமுக வேட்பாளருக்கு சிக்கல்

கரூர், மே 8: அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளராக சாகுல் அமீது போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து டிடிவி தினகரன் 2நாட்கள் பிரசாரம் செய்தார்.  மாவட்ட செயலாளரான தங்கவேல் நடந்து முடிந்த எம்பி தேர்தலில் போட்டியிட்டார். இவர் எம்பி தேர்தலில் போட்டியிட்ட போது செயல்பட்டது போல தற்போது  சாகுல் அமீதுவுக்கு செயல்படவில்லை என கட்சி நிர்வாகிகள் குறைகூறிவருகின்றனர். தான்வேட்பாளராக இருந்தபோது கட்சி வேலை செய்தவர்களிடம் நடந்து கொண்டதுபோல தற்போது நடந்து கொள்வதில்லை. இது குறித்து அமமுக வட்டாரத்தில் கேட்டபோது. எதிலும் பிடிப்பு இல்லாதது போன்று நடந்து கொள்கிறார். தற்போது தான் தீவிர அரசியலுக்கு வந்துள்ள தங்கவேலு மூத்த நிர்வாகிகளை மதிப்பதில்லை. மேலும் மூத்த நிர்வாகியை போல அவரது நடவடிக்கைகள் உள்ளன.

மேலும் மாவட்ட செயலாளர் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட எண்ணி இருந்தார். ஆனால் அரவக்குறிச்சி இடைத்தேர்தல் வருகிற மாதிரி அறிகுறி எதுவும் தெரியவில்லை. அதனால் எம்பிசீட் கேட்டு கரூர் எம்பி தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் கோர்ட்டு உத்தரவின் காரணமாக தற்போது அரவக்குறிச்சிக்கு திடீரென தேர்தல் வந்துவிட்டது. இவரது  இது போன்ற  செயல்கள் சட்டமன்ற வேட்பாளருக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது என்றனர்.

Tags : District Secretary ,electorate ,
× RELATED இஸ்ரேல் ராணுவத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் ஆர்ப்பாட்டம்