×

தோகைமலை அருகே கொசூரில் சூறாவளி காற்றால் 40 வீடுகள் சேதம் மின்சாரமின்றி மக்கள் தவிப்பு

தோகைமலை, மே 8: தோகைமலை அருகே சூறாவளி காற்றால் 40 வீடுகள் சேதமானது. இரவு முழுவதும் மின்சாரமின்றி மக்கள் தவித்தனர். கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி குப்பாண்டியூர், கம்புலியாம்பட்டி, வாழைக்கிணம், கோம்பையூர், தந்திரிபட்டி ஆகிய கிராமங்களில் நேற்று முன் தினம் இரவு பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் குப்பாண்டியூரில் வசிக்கும் பால்ராஜ், அர்ஜீன், பழனி, பெருமாள், ஏழுமலை, வாழைகிணம் பகுதியை சேர்ந்த சுப்ரமணி, சிறும்பாயி, மற்றும் தந்திரிபட்டியை சேர்ந்த மருதமுத்து, மகாமுனி உள்பட 40 க்கும் மேற்பட்டோரின்  குடியிருப்புகளின் மேற் கூறைகள்  காற்றில்  பறந்தது.
 
இதனால் குடியிருப்புகளின் ஆஸ்பிடாஸ்கள், ஓடுகளை பல மீட்டர் தூரம் தூக்கி வீசியதால் குடியிருப்பில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சியை–்ந்தனர்.. இரவு 8 மணி முதல் 9 மணி வரை தொடர்ந்து வீசிய சூறாவளி காற்றால் கால்நடைகளுக்காக அமைக்கப்பட்ட ஆஸ்பிடாஸ் கொட்டகைகள், கால்நடை தீவனங்களின் வைக்கோல்போர், மின்கம்பங்கள் என அனைத்தும்  சேதமானது. வீடுகள் முழுவதும் சேமானதால் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று தஞ்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த  கடவூர் தாசில்தார் விஜயகுமார், விஏஓ குமாரபாண்டியன் ஆகியோர் குடியிருப்புகளை  பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல்  கூறினர். காற்றில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் இரவு முழுதும் மின்சாரமின்றி மக்கள் பரிதவித்தனர்.

Tags : homes ,windstorm ,neighborhood ,Kodagamalai ,
× RELATED இல்லங்களில் இனிய வேல் பூஜை