×

செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரை திருவிழா

உடன்குடி, மே 8: செட்டியாபத்து ஐந்து வீட்டு சுவாமி கோயில் சித்திரை திருவிழாவையொட்டி பல்லாயிரகணக்கான பக்தர்களுக்கு அன்னமுத்திரி பிரசாதம் வழங்கப்பட்டது. உடன்குடி அருகேயுள்ள செட்டியாபத்து ஐந்து வீட்டுசுவாமி கோயில் தென்மாவட்டங்களில் பிரசித்திபெற்றது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இதன்படி இந்தாண்டுக்கான திருவிழா கடந்த 30ம்தேதி இரவு 7மணிக்கு கஞ்சி பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து பக்தர்களுக்கு கஞ்சி வழங்கபட்டது. கடந்த 1ம் தேதி நண்பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜையும், ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இரவு 7 மணிக்கு சிறப்பு பூஜை, இரவு 10 மணிக்கு மேக்கட்டி கட்டுதல், மேக்கட்டி பூஜையும் நடந்தது. திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து குடும்பத்தினருடன் வந்து கோயில் வளாகத்தில் முகாமிட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததனர்.

இதையொட்டி 5ம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் இரவு 10 மணி வரை முழுநேரமும் சிறப்பு பூஜை நடந்தது.  மாலை 6 மணிக்கு சமயசொற்பொழிவு, பட்டிமன்றம், இன்னிசை கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 6ம் தேதி பகல் 11மணிக்கு ஆயிரகணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது, மாலை 3 மணிக்கு அன்னமுத்திரி சிறப்பு பூஜையும், மாலை 4 மணிக்கு அன்னமுத்திரி பிரசாதமும் வழங்கப்பட்டது. இதை கோயிலில் தங்கியிருந்து வழிபட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெற்றுக்கொண்டு ஊருக்கு சென்றனர்.  நேற்று (7ம் தேதி) இரவு 7மணிக்கு கும்பாபிஷேகத்துடன் சித்திரை திருவிழா நிறைவு பெற்றது. ஏற்பாடுகளை செயல்அலுவலர் ராதா, அறங்காவலர்குழுத்தலைவர் சீ னிவாசன், அறங்காவலர்கள் ஞானேந்திரபிரகாஷ், ராமகிருஷ்ணன், பாஸ்கரன், செந்தில்குமாரி மற்றும் கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

Tags : Chettiyapattu ,house ,festival ,Swami Temple Chaiti ,
× RELATED மேற்கு வங்க ஆளுநர் மாளிகை ஊழியர்கள் மீது வழக்கு..!!