×

ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு பெ.ம.க. நிர்வாகிகள் ஆதரவு

நெல்லை, மே 8: இடைத்தேர்தல் நடைபெறும் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும்  அதிமுக வேட்பாளர் மோகனுக்கு பெருந்தலைவர் மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆதரவு தெரிவித்தனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்ஆர் தனபாலனின் ஆணைக்கிணங்க கட்சியின் மாநில தலைமை நிலைய செயலாளர் சிவகுமார், மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் விஜய்மாரீஸ், ஜோசப், ஆரோக்கிய ராசையா, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் அந்தோணிராஜ், மாவட்ட பொருளாளர் பால்ராஜ், இளைஞர் அணி மாவட்டத் தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர், தூத்துக்குடி முத்தையாபுரத்தில்  நடந்த   தேர்தல் பிரசாரத்தின் போது ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை மரியாதை நிமித்தம் சந்தித்து சால்வை அணிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

Tags : Mohan Administrators ,Ottapidaram AIADMK ,
× RELATED ஓட்டப்பிடாரம் அதிமுக வேட்பாளர் மோகனுக்கு பெ.ம.க. நிர்வாகிகள் ஆதரவு