×

முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி மாநகராட்சியை மக்கள் முற்றுகை

தூத்துக்குடி, மே 8: தூத்துக்குடியில் முறையாக குடிநீர் விநியோகிக்க கோரி மாநகராட்சி அலுவலகத்தை  மக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி- திருச்செந்தூர் ரோட்டில் உள்ள சத்யாநகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் வரை கால்டுவெல் காலனி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பைப்லைன்கள் உடைந்து போனதால் கடந்த 2 ஆண்டுகளாக லாரிகள் வாயிலாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இதிலும் தற்போது பல நாட்களாக லாரிகளில் குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. நேற்று முன்தினம் ஒரே ஒரு லாரியில் குடிநீர் கொண்டுவந்து அனைத்து பகுதி மக்களும் குடத்துடன் வந்து பிடித்து செல்லுமாறு வற்புறுத்தியுள்ளனர். இதுவும் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் ஆவேசத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் காலிக்குடங்களுடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு திரண்டு வந்து நேற்று முற்றுகையிட்டனர். மேலும்  தூத்துக்குடி ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு அழகுபடுத்தும் திட்டங்கள் நடந்து வரும் நிலையில் அடிப்படை வசதிகளுக்கே அல்லாடும் நிலை உள்ளது அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்கு முறையாக பைப் லைன் அமைத்து முறையாக குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அங்கிருந்து கலைந்துச்சென்ற அவர்கள், திருச்செந்தூர் ரோட்டில் சாலை மறியல் செய்ய முயன்றபோது தென்பாகம் போலீசார், அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags : siege ,corporation ,
× RELATED மாநகராட்சி மேயர், கமிஷனர் வரிசையில் நின்று வாக்களிப்பு