×

கோவா மாநிலத்தில் நடைபெற்றது தேசிய சிலம்பாட்ட போட்டி

திருப்போரூர், மே 8: அனைத்திந்திய சிலம்பம் பிரிமியர் லீக் விளையாட்டு  சங்கம் மற்றும் கோவா தமிழ்ச்சங்கம் ஆகியவை இணைந்து தேசிய சிலம்பாட்ட போட்டியை நடத்தின.
கோவா மாநிலத்தில் தலிகோவா நகரில் உள்ள கோவா பல்கலைக்கழக  வளாகத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில்  இருந்து சிலம்ப போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவா மாநில விளையாட்டு  மற்றும் இளைஞர் நலத்துறை செயலாளர் அசோக்குமார் ஜெயபால் வெற்றி கோப்பை  மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

தமிழ்நாட்டில் இருந்து 4 குழுக்கள் போட்டியில் கலந்துகொண்டன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் சிலம்பாட்டப்  பயிற்சியாளர் தனபால் மாஸ்டர் தலைமையில் 40 பேர் இந்த போட்டியில்  பங்கேற்றனர். இதில் திருப்போரூர் அடுத்துள்ள தண்டலம் கிராமத்தை சேர்ந்த 7  பேர் கொண்ட மகளிருக்கான குழுப்போட்டியில் தேசிய அளவில் 2ம்  இடம் பிடித்து வெள்ளி பதக்கம் பெற்றனர். அதேபோன்று சப்.ஜூனியர் பிரிவில்  தண்டலம் கிராமத்தை சேர்ந்த யசோதர் (8) என்ற சிறுவன் தேசிய அளவில் முதல்  பரிசு வென்று அசத்தினார். போட்டிகளில் வெற்றி பெற்று திரும்பிய  அனைவருக்கும் திருப்போரூர் மற்றும் தண்டலம் கிராம மக்கள் பாராட்டும்,  வாழ்த்தும் தெரிவித்தனர்.

Tags : competition ,National Contest ,Goa ,
× RELATED தேர்தல் விதிமுறையை மீறி அண்ணாமலை...