×

வீட்டில் பதுக்கிய 700 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

திருத்தணி, மே 8: திருத்தணியில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்து ஆந்திராவிற்கு கடத்த இருந்த 700 கிலோ ரேஷன் அரிசியை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாருக்கு திருத்தணி பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் மாவட்ட பறக்கும் படை, வருவாய் சிறப்பு ஆய்வாளர் நித்தியானந்தம் தலைமையில் திடீரென திருத்தணி கவரை தெருவில் உள்ள ஒரு வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் வராண்டாவில் சுமார் 700 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனர்.

Tags : home ,
× RELATED நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சக...