×

பெரம்பூர் பூங்காவில் கிரிக்கெட் விளையாட்டில் இரு தரப்பினர் மோதல் : வாலிபர் கன்னம் கிழிப்பு

சென்னை, மே 8: பெரம்பூர் பூங்காவில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு வாலிபரின் கன்னம் கத்தியால் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பூர், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (எ) எலி (21). இவர், நேற்று முன்தினம் மாலை பெரம்பூர் பூங்காவில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். அப்போது, அருகில் விளையாடிக் கொண்டு இருந்த அதே பகுதியை சேர்ந்த விஜய் என்பவரை காக்கா என ராஜேந்திரன் கேலி செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜய், தனது தந்தை சக்திவேல் மற்றும் தம்பி விக்னேஷ், நாகராஜ் ஆகியோரை அழைத்து வந்து ராஜேந்திரனை தட்டிக்கேட்டார். அப்போது, இரு தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இதில், ராஜேந்திரனின் கன்னத்தை கத்தியால் கிழித்துவிட்டு தப்பினர். பலத்த காயமடைந்த இரு தரப்பினரும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து இருதரப்பினர் அளித்த புகாரின்பேரில் ஐசிஎப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : cricket match ,Perumbur Park ,
× RELATED டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் இன்று தொடக்கம்