×

கோரிக்கையை வலியுறுத்தி கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் மேல்கவரப்பட்டு கிராம மக்கள் தர்ணா போலீசாரிடம் வாக்குவாதம்: பரபரப்பு

கடலூர், மே 7: கடலூர் ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை வலியுறுத்தி கிராமமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் ஆட்சியர் அலுவலகத்துக்கு பண்ருட்டி அடுத்த மேல்கவரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மனு கொடுக்க வந்தனர். அப்போது ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அனைவரையும் உள்ளே விட முடியாது என மறுத்தனர். மேலும் மனு கொடுப்பதற்கு 5 பேர் மட்டுமே செல்லுங்கள் என எடுத்துரைத்தனர். இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறும் போது, கவரப்பட்டு பகுதியை சேர்ந்த திவாகர் (22), தவசி (18) மற்றும் சிறுவர்கள் மோட்டார் சைக்கிளில் குச்சி
பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திவாகரை தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மேல்கவரப்பட்டு பொதுமக்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் இதுதொடர்பாக உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.

எனவே இதுதொடர்பான நடவடிக்கை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்துள்ளோம். ஆனால் இங்கேயும் போலீசார் அனுமதிக்க மறுக்கின்றனர். எனவே மனுவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுப்பதற்காக வந்துள்ளோம் என்றனர். இந்நிலையில் பொதுமக்களிடம் இருந்து மனுவை பெறுவதற்கு உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து மனுவை ஆட்சியர் அலுவலகம் பெற்றதை தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

Tags : Cuddalore Collector ,
× RELATED ஏப்ரல் 19ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று தொடக்கம்