×

எஸ்எஸ்எல்சி சிறப்பு தேர்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

புதுச்சேரி, மே 7:  புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குநர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 2019ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்று முடிந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியுற்றவர்கள், வருகை புரியாதவர்களுக்காக வருகிற ஜூன் 14ம் தேதி தொடங்கி ஜூன் 21ம் தேதி வரை நடைபெறவிருக்கும் 10ம் வகுப்பு சிறப்பு துணை பொதுத்தேர்வு எழுத விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் அவரவர் பயின்ற பள்ளிகள், தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளியின் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் மட்டும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க இயலும். விண்ணப்பிக்க விரும்பும் தேர்வர்கள் பள்ளிகள், தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று வருகிற 10ம் தேதி வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும். தனியார் ப்ரவுசிங் சென்டர்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது.

தேர்வு கட்டணம் செலுத்தும் முறை: தேர்வு கட்டணம் ரூ.125 மற்றும் ஆன்-லைன் பதிவு கட்டணம் ரூ.50யை சேர்த்து மொத்தம் ரூ.175யை ஆன்-லைனில் விண்ணப்பிக்கும் பள்ளிகள், தேர்வு மையங்களிலேயே பணமாக மட்டுமே செலுத்த வேண்டும். தேர்வுக்கூட அனுமதி சீட்டுகளை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து ெகாள்ள வேண்டும். பதிவிறக்கம் செய்ய வேண்டிய நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

தேர்வர் தமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தேர்வு மையம் குறித்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டில் அறிந்து கொள்ளலாம். தேர்வர்களுக்கு தேர்வெழுத தற்போது வழங்கப்படும் அனுமதி முற்றிலும் தற்காலிகமானது எனவும், தேர்வர்களின் விண்ணப்பம் மற்றும் தகுதி குறித்து ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags :
× RELATED விக்கிரவாண்டி அருகே விபத்தில் 2 பேர்...